நார்த்தர்ன் அலையன்ஸ் குறித்து பாகிஸ்தான் அச்சம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் மீது குறுகிய காலத் தாக்குதலைத் தான் அமெரிக்கா நடத்தவுள்ளது என பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்கூறினார்.

இன்று இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

நீண்ட தாக்குதல் ஏதும் இருக்காது என அமெரிக்க அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது. காபூல், காணடஹார், ஜலாலாபாத்,மஷார்-ஏ-ஷெரீப் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களைத் தான் அமெரிக்கா தாக்கி வருகிறது.

இந்தத் தாக்குதலைப் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். (தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ரஷ்ய, இந்திய ஆதரவாளர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இவர்கள் தலிபான், பாகிஸ்தான், பின்லேடனை ஆகியோரை எதிர்த்துப் போராடி வருகின்றனர்).

இந்தப் படையினர் ஆட்சிக்கு வந்தால் பிரச்சனை தான் ஏற்படும். அங்கு நட்புறவு கொண்ட ஆட்சி அமைவதையே பாகிஸ்தான்விரும்புகிறது. நார்த்தர்ன்ஸ் அலையன்ஸ் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுக்கு நல்லதல்ல.

இந்தப் போருக்குப் பின் அனைத்து இனத்தினரையும் கொண்ட ஒரு அரசை ஆப்கானிஸ்தானில் அமைக்க வேண்டும்.ஆப்ானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் வான் வெளியை அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தி வருகின்றன.ஆனால், பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்கள் எதையும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.

தலிபான் ஆட்சி போன பிறகு ஆப்கானிஸ்தானில் நல்ல அடிப்படைக் கட்டமைப்பு வசதியை உருவாக்கித் தர வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+