மேயர் தேர்தலில் திமுகவுக்கு சு. சுவாமி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக மேயர் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரை வாயே திறக்காமல் இருந்து வந்த சுவாமி, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இப்போது தன் அமைதியைக் கலைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
பிற இடங்களுக்கான தேர்தலில் -நல்ல, உண்மையாக உழைக்கும் தன்மை கொண்ட வேட்பாளர்களுக்கு, அவர்கள்எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
பேட்டியின்போது கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரலேகா உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications