நகராட்சி கூட்டத்தில் தாமரைக்கனி - அவரது மகன் கடும் மோதல்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் கடைசிக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. இன்பத்தமிழனும், அவரது தந்தைதாமரைக்கனியும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவராக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி. இவருக்கும் இவரதுமகனும் அதிமுக எம்.எல்.ஏவுமான இன்பத்தமிழனுக்கும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்து கடும் மோதல்நடந்துவருகிறது. தற்போது திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு தாமரைக்கனி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நகராட்சியின் கடைசிக் கூட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது. கூட்டம் ஆரம்பித்தவுடன்தாமரைக்கனி தீர்மானங்களைப் பற்றி விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது இன்பத்தமிழன் எழுந்து, தமிழக அரசு வழங்கிய இலவச வேட்டி, சேலைகளை தாமரைக்கனி பதுக்கிவைத்திருப்பது குறித்து போலீசில் புகார் தரப்பட்டுள்ளதா என்று நகராட்சி இன்ஜினியர் மனோகர சந்திரனிடம்கேட்டார்.
உடனே தாமரைக்கனி குறுக்கிட்டு, மன்றத்தில் எந்தவிஷயம் பேசவேண்டுமானாலும் நகராட்சித் தலைவரிடம்அனுமதிகேட்கவேண்டும் என்று கூறினார்.
அதற்கு இன்பத்தமிழன் கோபமாக, "உன்னிடம் என்னய்யா அனுமதி கேட்பது? எனக்கு அனுமதி தர நீ யார்? நான்எம்.எல்.ஏ. தெரியுமா?" என்று கேட்டார்.
அப்போது திமுக உறுப்பிணர்கள் குறுக்கிட்டு, முதலில் மரியாதையாக் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் என்றுஇன்பத்தமிழனை எச்சரித்தனர்.
இருப்பினும் தாமரைக்கனியும், இன்பத்தமிழனும் ஒருவரை ஒருவர் வசைபாடுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்துகடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.
பிறகு கூட்டத்தில் வாசிக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறிவட்டு, கூட்டம்முடிந்துவிட்டது எக்னறு அறிவித்துவிட்டு அவையை விட்டு தாமரைக்கனி வெளியேறினார்.
இந்த் தீர்மானங்களை அதிமுக கவுன்சிலர்கள் தவிர மற்றவர்கள் ஆதரித்துக் கையெழுத்திட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications