இந்திய சிறையிலிருந்த 13 இலங்கை மீனவர்கள் விடுதலை
தூத்துக்குடி:
இந்திய கடற்பகுதியில் அத்து மீறி மீன் பிடித்ததற்காக இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 13இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்திய கடற்பகுதியில் அத்து மீறி மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அதே போல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்கள் சில மாதங்கள் கழித்து விடுதலைசெய்யப்படுவார்கள். இது தொடர்கதையாக நடந்து வரும் விஷயம்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு இந்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 13 மீனவர்களை விடுதலை செய்யவதாக அரசுஅறிவித்திருந்தது.
இதையடுத்து இலங்கை தூதரக முதன்மை செயலாளர் கே.பத்மநாபன் தூத்துக்குடிக்கு வந்தார். அவருடன்தூத்குக்குடி மாவட்ட ஆட்சி தலைவர், இந்திய கடலோர காவற்படை கமாண்டர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின் இலங்கை மீனவர்கள் 13 பேரையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த படகுகளையும்தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கை மீனவர்கள் 13 பேரும் தூத்துக்குடியின் புதிய துறைமுகத்திலிருந்து இலங்கை புறப்பட்டுச்சென்றனர். இவர்கள் அனைவரை-யும் மத்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான அகல்யாபாய்,நாயக்தேவி என்ற கப்பல்கள் அழைத்துச் சென்றன.
இவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையிலிருக்கும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரிடம்ஒப்படைக்கப்படுவார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications