குமரியில் 31 இடங்களில் வாக்கு எண்ணிக்கை
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 31 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்றுஅம்மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளும்உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக கேரள போலீஸாரும் கூடுதலாக வரவழைக்கப்படவுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இருப்பினும், தேர்தலின் போதுஇந்த மழை நின்று விடும் என்று மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
மழையினால் தொலை தூர கிராமங்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்படாத வகையில் போதுமான ஏற்பாடுகளைமாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இந்த மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மொத்தம் 31 இடங்களில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications