உட்கார இடம் கேட்டு பாஸ்போர்ட் ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
சென்னை பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள், தங்களது அலுவலத்தில் நிலவும் இடவசதியின்மையைக் கண்டித்துவியாழக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து ஊழியர் சங்கத் தலைவர் பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. சென்னை சாஸ்திரிபவன் வளாகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் இடப் பற்றாக்குறை காரணமாக திணறி வருகிறது.
இந்த அலுவலகத்தில் மொத்தம் 150 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு முன்பு வருடத்திற்கு 10,000பாஸ்போர்ட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இப்போதோ, வருடத்திற்கு 2 லட்சம் பாஸ்போர்ட்கள்வழங்கப்படுகின்றன.
வெறும் 8000 சதுர அடி பரப்பளவிலேயே இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. ஆனால் தேவையைப் பார்த்தால்குறைந்தது 50,000 சதுர அடி அலுவலகமாவது தேவை. இதைக் கருத்தில் கொண்டு அண்ணா சாலையில் பரந்தபரப்பளவில் ஒரு இடம் பார்க்கப்பட்டது. ஆனால் அலுவலகத்தை அங்கு மாற்றுவதில் பல சிக்கல்கள் எழுந்தன.
நிற்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு குறுகிய அலுவலகத்தில் நாங்கள் வேலை பார்த்து வருகிறோம்.விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வைக்க்க கூட இடம் இல்லாமல் தரையில் போட்டு அவற்றின் மீதுஉட்கார்ந்து கூட வேலை செய்து வருகிறோம்.
இந்த அலுவலகத்திற்குத் தினசரி வருமானம் ரூ. 3 லட்சம் ஆகும். ஆனால் அலுவலகத்தில் வசதி ஏற்படுத்தகொஞ்சம் கூட கருணை காட்ட மறுக்கிறது மத்திய அரசு.
எனவே, பெரிய அளவிலான வாடகைக் கட்டிடத்திற்கு எங்களது அலுவலகத்தை மாற்ற வேண்டும். பெங்களூர்,கொச்சி போன்ற நகரங்களில் உள்ள அலுவலகங்கள் மிகப் பிரமாண்டமானதாக உள்ளன. ஆனால் இந்தியாவின்நான்காவது பெரிய நகரான சென்னையில் படு மோசமான நிலையில் எங்களது அலுவலகம் உள்ளது.
எங்களது கோரிக்கையை மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. எனவே எங்களது கோரிக்கையைவலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். சாஸ்திரி பவன் எதிரேவியாழக்கிழமை காலை 11 மணிக்கு போராட்டம் துவங்குகிறது. டெல்லியிலும் நாங்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications