கந்துவட்டி கொடுமை: வேலூரில் ஒரே குடும்பத்தின் 5 பேர் தற்கொலை
வேலூர்:
கந்துவட்டிக் கொடுமையைத் தாங்கமுடியாமல் வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைசெய்துகொண்டனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ரங்காபுரம் தமாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்தி. இவருக்கு மீனா என்றமனைவியும், ஜமுனா, அம்மு ஆகிய 2 மகள்களும், ராஜேஷ் என்ற மகனும் இருந்தனர். காந்தி அந்தப் பகுதியில்முன்பு பால் வியாபபாரம் செய்துவந்திருக்கிறார்.
வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதால், வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரம் செய்துள்ளார். இதிலும் நட்டம்ஏற்பட்டதால், அந்த வியாபாரத்தை விட்டுவிட்டு பால் கறக்கும் வேலை செய்துவந்தார். இந்த வருமானத்தைவைத்து கும்பம் நடத்தவும், பழைய கடனை அடைக்கவும் அவரால் முடியவில்லை.
இதனால் மனமுடைந்த காந்தி நேற்று இரவு தனது 3 குழந்தைகளுக்கும் பாலில் டெமக்ரான் என்ற பூச்சி மருந்தைக்கலந்துகொடுத்துவிட்டார். பிறகு அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அந்த விஷத்தைக் குடித்து விட்டுப்படுத்துவிட்டனர்,.
மறுநாள் காலை கண்ணன் என்ற பால்காரர் காந்தியை எழுப்ப அவரது வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.வெகுநேரம் தட்டியும் திறக்காததால் ஜன்னலைத் திறத்து பார்த்தவர், உள்ளே 5 பேரும் இறந்து கிடப்பதைப் பார்த்துஅதிர்ச்சியடைந்தார்.
பிறகு இதுகுறித்துத் தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் பிரேதங்களைக் கப்ைபற்றி பரிசோதனைக்அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறப்பதற்கு முன்பு, "எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை" என்று காந்தி கடிதம் எழுதிவைத்துள்ளார்.
வேலூரில் கந்துவட்டிக் கொடுமை அதிகரித்து வருகிறது. கடந்த 1 ஆண்டில் வேலூரில் மட்டும் 168 பேர்கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications