வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது... பா.ஜ.க.
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பாரதீயஜனதாக் கட்சித் தலைவர் டாக்ட கிருபாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிகபட்ச இடங்களில் நாங்கள்வெற்றி பெறுவோம்.
பாரதீய ஜனதாக் கட்சியினர் போகுமிடமெல்லாம் நல்ல ஆதரவு இருக்கிறது. மக்கள் திரளாக கூடி வருகிறார்கள்.
தேர்தலில் தில்லுமுல்லு நடப்பதாக, விதிமீறல் நடப்பதாக புகார் ஏதும் வரவில்லை என்று தேர்தல் ஆணையர்பாண்டியன் கூறியுள்ளார்.
ஆனால் நாங்கள் போகும் இடமெல்லாம் ஏராளமானோர் புகார் கூறி வருகிறார்கள். இதற்கு ஆணையர் என்னசொல்லப் போகிறார்?
தேர்தலின்போது வன்முறையை ஏற்படுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இதைத் தடுக்க போலீஸார் ன்வரவேண்டும். அதிமுகவினரின் சதித் திட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்குக் கடிதம்எழுதியுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications