சென்னையில் கைதான தீவிரவாதிகள் அத்வானியைக் கொல்ல சதி
சென்னை:
சென்னையில் கைதான தீவிரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் உள்துறை அமைச்சர்அத்வானியைக் கொலைசெய்யத் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது.
சென்னை செம்பியத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடிப் படையினர் நடத்திய திடீர் சோதனையில் 2 தீவிரவாதிகள்கைதுசெய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்களில் ஒருவன் பெயர் சகீல் முமது என்றும் மற்றொருவன் பெயர் ஜாஹிர் என்றும்தெரியவந்துள்ளது. இவர்களில் சகீல் என்பவர் மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சோட்டா ஷகீலுக்குநெருக்கமான சாஜிர் ஷேக் என்பவரின் மைத்துனர் ஆவார். சாஜிர் ஷேக் மும்பை போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜாஹிர் என்பவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்.
இவர்கள் இப்போது மும்பை போலீசாரின் பாதுகாப்பின் கீழ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
இவர்களைத் தவிர சோட்டா ஷகீலின் கூட்டாளிகள் 6 பேர் மும்பையில் ஜோகேஸ்வரி காலனியில்கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரில் கடந்த 6ம் தேதி அக்பர் உசேன் என்ற தீவிரவாதி கைதுசெய்யப்பட்டுள்ளான்.
இவர்கள் அனைவரையும் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்வெளியானதாக மும்பை நகர போலீஸ் கமிஷ்னர் எம்.என்.சிங் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
கைதான அனைவரும் சோட்டா ஷகீலின் கூட்டாளிகள். இவர்கள் அனைவரும் சேர்ந்து உள்துறை அமைச்சர்அத்வானியைக் கொலை செய்யத் திட்மிட்டிருந்தனர். மேலும் மும்பை மற்றும் உத்திரப்பிரதேசத்தின் பல முக்கியநகரங்களில் வெடிகுண்டு வைக்கவும் இவர்கள் திட்மிட்டிருந்தனர்.
சரியான நேரத்தில் இவர்களைப் போலீசார் பிடித்ததால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது என்றார்.
தற்செயலாகத்தான் சென்னைக்கு வந்தனர் - முத்துக்கருப்பன்
"கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளும் தற்செயலாகத்தான் சென்னைக்கு வந்தார்கள். மும்பை போலீசார் கொடுத்ததகவலின் அடிப்படையில்தான் நாங்கள் அவர்களைக் கைது செய்தோம். அந்தத் தீவிரவாதிகளுக்கும்சென்னைக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை" என்று சென்னை போலீஸ் கமிஷனர் இன்று (வியாழக்கிழமை)கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
சென்னையில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளும் உடனே மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் வெடிகுண்டு வைக்கும் திட்டம் அவர்களிடம் இல்லை. மேலும் வேறு யாரும் இதுபோன்றதீவிரவாதிகள் சென்னையில் நடமாடுகிறார்களா என்று அலசிப் பார்த்துவிட்டோம். அப்படி எதுவும் தகவல்இல்லை.
இவ்வாறு முத்துக்கருப்பன் கூறினார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications