பாகிஸ்தானில் பயங்கர வன்முறை - அமெரிக்க ஓட்டலுக்கு தீவைப்பு
கராச்சி:
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் இஸ்லாமிய மதவாதிகள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது,பயங்கர வன்முறை வெடித்தது. அப்போது அந்நகரில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான ஓட்டல் ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
கடந்த திங்கள்கிழமையிலிருந்தே பாகிஸ்தானில் பெரும் வன்முறை நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கு எதிராககோஷங்கள் எழுப்பியும், அமெரிக்க கொடிகளை எரித்தும் அந்த மதவாத அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை போராட்டத்தைத் தொடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கராச்சியில்உள்ள ஒரு ஓட்டலுக்குத் தீவைத்தனர்.
அமெரிக்காவுக்குச் சொந்தமான இந்த ஓட்டலின் பெயர்ப் பலகை மூடி மறைக்கப்பட்ட போதிலும், அங்கு அந்தஓட்டல் இருப்பதை வன்முறையாளர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர்.
இதனால் அவர்களின் வன்முறைக்கு இந்த ஓட்டல் தப்பவில்லை. ஓட்டலுக்குத் தீவைத்ததோடு நில்லாமல்,அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பஸ்கள், 3 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளுக்கும் தீவைத்து விட்டுஅவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதற்கிடையே, வன்முறையாளர்களைத் தடுக்க முயன்ற போலீசார் மீது அவர்கள் கற்களைக் கொண்டு வீசினார்கள்.இதையடுத்து போலீசாருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications