காவிரி பிரச்சனை: மத்திய அரசு உதவ கருணாநிதி கோரிக்கை
சென்னை:
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் போட்டுள்ள வழக்கைமத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை கர்நாடகா ஏற்காவிட்டால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்குக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மத்திய அரசு செயல்படவேண்டும் என்றார்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரை திறந்துவிடாத காரணத்தால்தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள்பாதிப்படைந்துள்ளன.
இதையடுத்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசுவழக்குத் தொடர்ந்தது.
கடந்த புதன்கிழமை பிரதமர் தலைமையில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்திலும்தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கூறிவிட்டது.
இதையடுத்து காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்கைதுரிதப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் கர்நாடக அரசு தமிழக அரசுக்கு காவிரி நீரைதிறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை கர்நாடகம் ஏற்க மறுத்து வருகிறது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து கூறுகையில்,
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை கர்நாடகாஏற்காவிட்டால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்குக்கு மத்திய அரசுஆதரவு அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும்.
காவிரி நதி நீர் ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்குஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாகூறியுள்ளார். அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறையை தூண்டும் விதமாக அதிமுகசுவரொட்டிகளை ஒட்டி வருகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
மத்தியில் பா.ஜ.க. அரசை திமுக ஆதரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications