தினமும் 1 டி.எம்.சி. காவிரி நீர் வேண்டும் - உச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் வலியுறுத்தல்
டெல்லி:
தினந்தோறும் குறைந்தது 1 டி.எம்.சி. அளவு காவிரி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்காகத் திறந்து விடவலியுறுத்துமாறு உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 10ம் தேதி (நேற்று முன்தினம்) காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து,இனி உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நம்புவது என்ற முடிவுக்குத் தமிழகம் வந்துவிட்டது.
ஆணையக் கூட்டம் முடிந்த பல மணி நேரங்களுக்குப் பிறகே, நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில்கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவரும் பிரதமருமான வாஜ்பாய் உத்தரவிட்டார்.
ஆனாலும் கர்நாடக அரசு இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை. ஆணையத்தின்உத்தரவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளாரேதவிர, காவிரியில் நீர் திறந்து விடுவதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
இந்நிலையில், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்த வேண்டும் என்று ஏற்கனவே தொடரப்பட்டவழக்கு குறித்து, இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு நினைவூட்டியது.
தினமும் குறைந்தது 1 டி.எம்.சி. காவிரி நீரையாவது கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் மூலம்தான் தற்போது நடவில் உள்ள சம்பா பயிர்கள் பிழைக்கும் என்பதையும் கண்ணீர் விடாத குறையாகஉச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் எடுத்துக் கூறியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications