தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவ நடவடிக்கை: வாஜ்பாய்
வாரணாசி:
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தாக்குதல் நடத்தப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இதுவே நல்ல தருணம் என்று காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாகூறியுள்ளதைப் பற்றி பிரதமரிடம் அப்போது நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்துப் பேசுகையில் வாஜ்பாய்கூறியதாவது,
தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டவேண்டும் என்பதில் மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது. அவர்களுக்கு எதிராகராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
மேலும் தீவிரவாதத்தையும் இஸ்லாம் மதத்தையும் சில நாடுகள் இணைத்துப் பேசிவருகின்றன. சில இஸ்லாமியநாடுகள் தீவிரவாதத்தைப் புனிதப் போர் என்று கூறிவருகின்றன. தீவிரவாதம் மனித சமுதாயத்துக்கு எதிரானது.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சர்வதேச நிர்பந்தம் காரணமாகதற்போது அந்நாடு, அமெரிக்காவை ஆதரித்து வருகிறது.
இவ்வாறு பிரதமர் கூறினார்.












Click it and Unblock the Notifications