உரிமம் பெறாமல் "மெத்தனால்" விற்பது கொலைக் குற்றம்
சென்னை:
உரிமம் பெறாமல் மெத்தனால் விற்றால் கொலை வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று கள்ளத்தனமாகமெத்தனால் விற்பவர்களுக்கு மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பரம்வீர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது கூறியதாவது:
கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது மதுவிலக்குப் போலீசார் எடுத்த நடவடிக்கையில் இதுவரை 4,705பேர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
மெத்தனால் என்பது கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒரு வேதிப்பொருள். எனவே அதை விற்பது கொலைக்குற்றத்திற்குச் சமமானது.
இருப்பினும் இதைப்பயன்படுத்தி பெயின்ட், வார்னிஷ் ஆகியவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதற்கானஉரிமத்தை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும்.
உரிமம் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்குத் திருப்பி அளிக்கப்படும். ஆனால் உரிமம் எதுவும் இல்லாமல் விற்றால்அவர்கள் மீது கொலைக் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்குத் துணையாக இருப்பவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படும்.
இந்த மெத்தனால் லாரிகளில் கொண்டுவரப்படும் போது அது ஆவியாக வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பைப்பயன்படுத்தி லாரி டிரைவர்கள் அதிக அளவு மெத்தனாலை லாரியிலிருந்து எடுத்து கள்ளச்சாராயவியாபாரிகளுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர்.
இவ்வாறு செய்யப்படுவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications