உள்ளாட்சித் தேர்தல்... வீரப்பன் மறைவிடங்களில் பாதுகாப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வீரப்பன் மறைந்துள்ளதாகக் கருதப்படும் பகுதிகளில் உள்ள 104 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை, வாடாவள்ளி,மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய பகுதிகளிலும் நடைபெறுகிறது.
இப்பகுதிகளில் தேர்தல் நாளன்று (நாளை) வீரப்பன் திடீர் தாக்குதல் நடத்தலாம் என்று கருதிய மாவட்ட கலெக்டர்எம். முருகானந்தம் அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இப்பகுதிகளில் 119 இடங்கள் பதட்டம் மிகுந்த பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் 211கிராமங்களும் பதட்டம் மிகுந்த பகுதிகளாகக் கருதப்படுகின்றன.
இப்பகுதிகள் முழுவதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications