சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும் - இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நிலையற்றது என்றும், சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும் என்றும் தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது,

அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி வைத்துள்ள உறவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்பொழுதுநாங்கள் வேறு கூட்டணி அமைத்துள்ளோம்.

தமிழகத்தில் தற்போது நடக்கும் அதிமுக ஆட்சி நிலையானது அல்ல. முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வமே தான்ஒரு தற்காலிக முதல்வர் என்கிறார்.

மேலும் அதிமுகவில் உட்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது. விரைவில் அது வெளியில் தெரியவரும்.

ஜெயலலிதா மீது போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளும் அவருக்குச் சாதகமாகவே அமையும் என்சொல்லமுடியாது. இந்த நிலைமையைத் தெரிந்துகொள்ளாமல் அதிமுகவின் மூத்த அமைச்சர்களே, ஜெயலலிதாமீண்டும் முதல்வராவார் என்கிறார்கள்.

எனவே தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்.

தண்டனை வழங்கப்பட்ட ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றபோது, தண்டனை பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்(ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பெற்ற பாண்டே, சத்திய மூர்த்தி ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) மீண்டும்பதவியில் அமர்த்தப்படுவது எல்லாம் சாதாரணமான விஷயம் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+