ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மீண்டும் பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குமீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த எச்.எம். பாண்டேவுக்கு கொடைக்கானல்ஓட்டல் வழக்கில் ஒரு ஆண்டும், கலர் டி.வி. ஊழல் வழக்கில் 5 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோல், மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்தியமூர்த்திக்கு கலர் டி.வி. ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, இவர்கள் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைஎதிர்த்து, இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இவர்கள் 2 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை நீக்கி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் தற்போது மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புள்ளி விவர மையஆணையாளராக எச்.எம். பாண்டேவுக்கும், சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநராக சத்தியமூர்த்திக்கும்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களைத் தவிர, டி.ஆர். சீனிவாசன் மற்றும் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் தண்டனையிலிருந்து விலக்குபெற்று, தற்போது மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+