கருணாநிதியைத் தாக்காத ஜெ. அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டு சென்னையில் அதிமுகவெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கருணாநிதியை நேரடியாகத் தாக்காமல் "சிலர்" என்று மட்டும் கூறியுள்ளார்அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா.

கடந்த சட்டசபைத் தேர்தலில் இவ்வாறு அறிக்கை விடும்போது, "கருணாநிதி தான் என்னைப் போட்டியிட விடாமல்சதி செய்து விட்டார்" என்று எழுதியிருந்தார்.

இந்த முறையும் தனது முதல்வர் பதவி நீக்கத்துக்கு கருணாநிதி, மாறன் போன்றோர் தான் காரணம் என்று சொல்வார்என்று கூறப்பட்டது. ஆனால் நேரடியாக அவர்களைத் தாக்காமல் "சிலர்" என்று மட்டும் இந்த அறிக்கையில்கூறியுள்ளார் ஜெயலலிதா.

அறிக்கையில் ஜெயலலிதா மேலும் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில்அதிமுக தனது தோழமைக்கட்சிகளுடன் தேர்தலில் நிற்கிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி நீங்கள் அளித்த ஆதரவால் அமோக வெற்றி பெற்றது.அதையடுத்து எனது தலைமையில் பதவியேற்ற அரசு, தமிழகத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்கும்வகையில் செயல்பட்டுவந்தது.

நான் பொறப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டபின்னர் பொறுப்பேற்றுள்ள, அதிமுக அரசும் வளர்ச்சிப் பாதையில்பீடுநடைபோட்டு வருவதை நன்கு அறிவீர்கள்.

விவசாயிகளுக்கு வட்டித்தள்ளுபடி, நீலகிரி தேயிலை விவசாயிகள் நலன்காக்க நடவடிக்கைகள், சென்னைஉள்ளிட்ட பல்வேறு நகரங்களின் குடிநீர் பிரச்சனையைப் போக்க பல்வேறு தொலைநோக்கு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செய்து அதிமுக அரசு மக்களின் பேராதரவைப் பெற்றுவருகிறுது.இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், எனக்கு எத்தனையோ இடையூறுகளைக் கொடுத்தார்கள்.

இருந்த போதிலும் என்மீது நீங்கள் காட்டிவரும் அன்பின் வலிமையால் அந்த இடையூறுகளை எல்லாம் தகர்த்துஎறிந்துவிட்டு மக்கள் நலப்பணிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளேன்.

தமிழக அரசின் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்துவதற்கு, உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுகவெற்றிபெறுவது அவசியம். இதை உணர்ந்து தமிழக வாக்காளர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அதிமுக மற்றும்அதன் தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+