காபூல் மீது 8வது நாளாக பயங்கர தாக்குதல்
காபூல்:
ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் ஜலாலாபாத் நகரங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் 8வது நாளாகதிங்கள்கிழமை (இன்று) அதிகாலை பயங்கர குண்டு தாக்குதல் நடத்தின.
குறைந்தது ஒரு வெடிச் சத்தத்தையாவது கேட்டதாக நேரில் பார்த்த பத்திரிகை நிருபர் ஒருவர் தெரிவித்தார். காபூல்நகரம் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் இன்று காலை 8.30 மணிக்கு அமெரிக்கவிமானங்கள் குண்டுகளை வீசின.
குறைந்தது 10 வெடிச்சத்தங்களாவது கேட்டது என்று வேறு ஒரு பத்திரிகை நிருபர் தெரிவித்தார்.
தலிபான்களின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் பதில் தாக்குதல் நடத்தும் போதிலும், அமெரிக்காவின் தாக்குதல்கள்தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
இதே ஜலாலாபாத் நகரில்தான் கடந்த 3 தினங்களுக்கு முன் அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் 200 பேர்வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் வடமேற்கு நகரமான பாட்கிஸ் நேற்று இரவு தாக்கப்பட்டதில் 12 பொதுமக்கள்கொல்லப்பட்டனர் என்றும் 32 பேர் காயமடைந்தனர் என்றும் தலிபான் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications