அமெரிக்க தாக்குதலை எதிர்த்து காஷ்மீரில் ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அமெரிக்காவின் தாக்குதல்களை எதிர்த்து, காஷ்மீரில் சில மதவாதஅமைப்புகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதில், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் அமெரிக்காவுக்கு எதிராகவும் பின் லேடனுக்கு ஆதராகவும் கோஷங்களை எழுப்பி,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்திலேயே இந்த ஆர்ப்பாட்டம் பெரும் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் வாகனங்களைத்தாக்கி, தீ வைத்ததோடு நில்லாமல், பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இதனால்போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களைக் கொண்டு எறிந்தனர்.

இந்த வன்முறையில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். 20 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீநகரில் அனைத்து கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. சாலைப்போக்குவரத்தும் முழுவதுமாகத் தடைபட்டிருந்தது.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (அக். 7) அமெரிக்கத் தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்தே காஷ்மீரில் உள்ள சிலமுஸ்லீம் தீவிரவாத இயக்கங்கள் மாறி மாறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+