பாகிஸ்தான் வன்முறையில் காயமடைந்த 2 போலீசார் சாவு

Subscribe to Oneindia Tamil

ஜகோபாபாத் (பாகிஸ்தான்):

பாகிஸ்தானின் ஜகோபாபாத் விமானப் படைத் தளம் அருகே ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஏற்பட்ட வன்முறையில்காயமடைந்த 3 போலீசார்களில், 2 பேர் இன்று அதிகாலை இறந்தனர்.

அமெரிக்கப் படைகளின் வருகையை எதிர்த்து இந்த விமானப் படைத் தளத்தின் அருகே நேற்று ஆயிரக்கணக்கானபாகிஸ்தானியர்கள் கூடினர். அரசுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராகவும், பின்லேடனுக்கு ஆதரவாகவும் அவர்கள்கோஷங்கள் எழுப்பினர்.

ஜமாத்-ஏ-உலமா அமைப்பு இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இங்கு கூடிய போராட்டக்காரர்கள்விமானப் படைத் தளத்துக்குள் நுழைய முயன்றதையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும்மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.ஒருவர் கொல்லப்பட்டார். சில போராட்டக்காரர்கள் போலீசார் மீது திருப்பிச் சுட்டனர். இதில் 3 போலீசார்காயமடைந்தனர்.

காயமடைந்த போலீசாரில் 2 பேர், இன்று அதிகாலை மருத்துவமனையில் இறந்தனர்.

முன்னதாக இந்தப் போராட்டத்துக்கு வந்த 400 பேரை போலீசார் வழிகளிலேயே மடக்கி கைது செய்தனர். ஆனால்,கிட்டத்தட்ட 2,000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று ஜமாத்-ஏ.உலமா அமைப்பு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+