முதல்வாரானபின் முதல்முறையாக சொந்த ஊருக்குச் செல்லும் பன்னீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஓட்டுப் போடுவதற்காக முதல் முறையாக சொந்த ஊரானபெரியகுளத்திற்கு இன்று செல்கிறார்.

ஜெயலலிதா பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து வருவாய்த்துறை அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம்திடீரென முதல்வராகப் பொறுப்பேற்றார். முதல்வரானதிலிருந்து அவர் இன்னும் தனது சொந்த ஊரானபெரியகுளத்திற்குச் செல்லவில்லை.

ஊருக்குச்சென்றால் அதிமுகவினரும், அவரது உறவிணரும் அவரை வரவேற்று உபசரித்து தன்னை தர்மசங்கடத்தில்ஆழ்த்திவிடுவார்கள் என்பதால் அதைத் தவிர்த்து வந்தார்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் வருவதால், பெரியகுளத்திற்குச் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் தற்போது அவர் ஊர் செல்லவிருக்கிறார்.

விமானம் மூலம் மதுரை வரும் அவரை மதுரை மாவட்டக் கலெக்டர் வரவேற்பார். பிறகு அங்கிருந்து காரில்பெரியகுளம் செல்லவிருக்கிறார். அங்கு தேனி மாவட்டக் கலெக்டர் அவரை வரவேற்பார்.

ஆனால் கட்சிக்காரர்களோ, உறவிணர்களோ வந்து வரவேற்கிறேன் என்று ஆர்ப்பாட்டம் செய்யவேண்டாம் என்றுஅறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

பெரிய குளத்தில் உள்ள தென்கரை 25 வது வார்டு புனிதபத்ரியா நடுநிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடியில்அவர் நாளை ஓட்டுப் போடுகிறார்.

நாளை மறுநாள் முதல்வர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+