உள்ளாட்சித் தேர்தல் - நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் நாளை முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது என்றும் அசம்பாவிதம் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்றும் தமிழக டி.ஜி.பி.நெய்ல்வால் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 4 மாநகராட்சிகளுக்கும், 44 நகராட்சிகள், 307 பேரூராட்சிகள்,195 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவுநடைபெறுகிறது.
இதையொட்டி வாக்கப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும்பகுதிகளில் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறைத் தலைவர்நெய்ல்வால் கூறினார். அவர் நிருபர்களிடம் திங்கள்கிழமை (இன்று) மேலும் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் பணிக்காக 84 ஆயிரம் பேர்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் தமிழக போலீசார், சி.ஆர்.பி.எப்., ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஆந்திர மாநிலஅதிரடிப்படை, கேரள மாநில அதிரடிப்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் அடங்குவர்.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4,000 இடங்கள் பதட்டம் நிறைந்த பகுதிகளாக அடையாளம்காணப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 5,005 இடங்கள் பதட்டம் நிறைந்தபகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் நடக்கவாய்ப்பில்லை என் நம்புகிறோம் என்றார் நெய்ல்வால்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications