வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழை- 2 பேர் பலி
சென்னை:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் மிக பலத்த மழைபெய்து வருகிறது. காரைக்குடி அருகே இடி தாக்கியதில் 2 பேர் இறந்தனர்.
சென்னைக்குத் தென்கிழக்கே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடதமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரங்களுக்கு வட தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலைமையம் எச்சரித்துள்ளது. இதனால் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சிறுகப்பட்டி கிராமத்தில் பயங்கரமாக இடி விழுந்தது. இதில் டீகடையில் டீ குடித்துக் கொண்டிருந்த 2 பேர் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். காயமடைந்த ஒருவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இரவு 8 மணி முதல் பெய்த மழை காரணமாக,கிண்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஒரு விளம்பர போர்டு சரிந்து விழுந்தது. இதனால் மின் கம்பிகளும் அறுந்துவிழுந்தன.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு முழுவதும் தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த வட கிழக்குப் பருவ மழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications