தேனியில் 15 ஆயிரம் வாக்குச் சீட்டுகளைக் காணவில்லை?
தேனி:
தேனி நகராட்சித் தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுகளில் 15 ஆயிரம் வாக்குச்சீட்டுகளைக்காணவில்லை என்று கூறப்படுகிறது.
தேனி, பெரியகுளம், சின்னமனூர், கம்பம், போடி ஆகிய நகராட்சிகள் மற்றும் எட்டு பஞ்சாயத்து யூனியன்களுக்குவாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தேனியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் நடந்து வந்தது.
இதனால் இந்த அச்சகம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, அச்சகத்தில் பணிபுரியும் யாரும்வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
4 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 20 அதிரடிப்படைப் போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினரும்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் அங்கேயே உணவு வரவழைக்கப்பட்டுபரிமாறப்பட்டது.
இந்நிலையில் தேனி நகராட்சித் தலைவர் பதவிக்கு அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் 15 ஆயிரம் வாக்குச்சீட்டுகள் காணாமல் போய்விட்டது என்று பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் தேனி மாவட்டக் கலெக்டர் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது:
தேனி மாவட்ட நகராட்சித் தலைவர் பதவிக்கு அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் காணாமல் போய்விட்டது என்றுதவறான செய்தி பரவியுள்ளது. யாரும் இதை நம்பவேண்டாம்.












Click it and Unblock the Notifications