தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான மாறுதல் உத்தரவுகளை கவர்னர்நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பித்தார்.

இதுகுறித்த விவரம் வருமாறு,

பிற்பட்டோர் நலத்துறையின் இணைச் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், அங்கிருந்து மாற்றப்பட்டு பதிவுத்துறைஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்த குப்புசாமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கூடுதல் கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கைக் கமிஷனராக இருந்த அசோக் வரதன் ஷெட்டி, பயிற்சிக்காக லண்டன்சென்றுள்ளதால், அந்த இடத்தில் சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணைச் செயலாளராக இருந்த சுகுமாறன், ஊரக வளர்ச்சித்துறையின் இணைச் செயலாளராக றியமிக்கப்பட்டுளளார்.

மாநிலத் தேர்தல் கமிஷனின் செயலாளராகப் பணியாற்றிவந்த அப்துல்லா ஷா, பிற்பட்டோர் நலத்துறை இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டள்ளார்.

சமூக பாதுகாப்புத் துறையின் இயக்குநராகப் பணியாற்றிவந்த ஷாலினி வஸிஷ்ட், சுற்றுச் சூழல் மற்றும்வனத்துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் துணைக் கமிஷனராகப் பணியாற்றிவந்த சந்திரமோகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல்கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி) செயலாளராக இருந்து வந்த அசோக் ரஞ்சன்மொஹந்தி, அங்கிருந்து மாற்றப்பட்டு வணிகவரித்துறையின் விஷேசச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு தகவல் பதிவு மையத்தின் கமிஷனராக எச்.எம்.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை டவுன் பஞ்சாயத்துகள் கூடுதல் இயக்குநராகவும், டி.ஆர்.ஓவாகவும் பணியாற்றிவந்த பழனிக்குமார்மாற்றப்பட்டு, தமிழக வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதில் பழக்குமார் மட்டும் டி.ஆர்.ஓவாக இருந்தவர். மற்றவர்கள்அனைவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+