ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்கத் தாக்குதல் ஆரம்பம்
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீது முதன்முறையாக ஹெலிகாப்டர்களைக் கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் ஆப்கானஸ்தான் மீது குறைந்த உயரத்தில் சென்று பயங்கர தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர் தாக்குதலைஅமெரிக்கா தொடங்கிவிட்டது. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தினால் இலக்குகளை குறி பிசகாமல் தாக்க முடியும்.தலிபான் படைகளின் நடமாட்டத்தையும் நேரில் கண்காணிக்க முடியும்.
நேற்று இரவு முதல்முறையாக அமெரிக்க ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. தலிபான்களின்தலைமையகமான காண்டஹாரில் உள்ள முக்கிய ராணுவ இலக்குகளை இந்த ஹெலிகாப்டர்கள் தாக்கின. இரவுமுழுவதுமே இந்த ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசின.
அமெரிக்காவான் ஏ.சி.-130 ரக கன்ஷிப்கள் என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டர்கள் நேற்றைய தாக்குதலில் முழுஅளவில் பயன்படுத்தப்பட்டன.
மருத்துவனை சிதறியது:
காண்டஹார் அருகே உள்ள தாமன் மாவட்டத்தில் ஒரு மருத்துவனை மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளைவீசின. இதில் குறைந்தபட்சம் 5 பேர் இறந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
அதே போல இன்னொரு அமெரிக்க ஜெட் விமானக் குண்டு காண்டஹாரை அடுத்த பஞ்சவீ பகுதியில் வீடுகள் மீதுவிழுந்து வெடித்தது. இதில் 9 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
கடும் தாக்குதல்:
தாக்குதல் தொடங்கிய கடந்த 9 நாட்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தாக்தலை ஆப்கானிஸ்தான்நேற்று தான் சந்தித்தது. தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் வரிசையாக வானில் வந்த வண்ணம் இருந்தன.குண்டுகளை போட்டவண்ணம் இருந்தன.
இடைவிடாமல் நூற்றுக்கணக்கான விமானங்கள் ஆப்கானிஸ்தான் விண்ணை ஆக்கிரமித்திருந்தன.
காண்டஹார், காபூல், மஷார்-ஏ-ஷெரீப், ஜலாலாபாத் போன்ற தலிபான்களின் தலைமையகங்கள் அமைந்துள்ளபகுதிகள் மீது விமானங்கள் குண்டுகளை மழையாகப் பொழிந்தன.
குண்டுகள் வெடிப்பதும் ஓலங்களும் கேட்ட வண்ணம் இருந்தன. ஒவ்வொரு தாக்குதலிலும் 18 முதல் 20விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தலிபான் ராணுவத்தினர் 5,6 பேர் கூட்டமாக நின்றிருந்தாலே அங்கே குண்டு வந்து விழுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications