முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை: கேரளாவுடன் விரைவில் தமிழகம் பேச்சு
தேனி:
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து தமிழகம் விரைவில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக தன் சொந்த ஊருக்குச் சென்ற பன்னீர்செல்வம், தேனியில்நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
நான் தமிழகத்தின் தற்காலிக முதல்வர்தான். தன் மேல் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா வருவார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள்ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டுதான் உள்ளன.
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கு குறித்த விசாரணை வரும் 29ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடக்கவுள்ளது. நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று ஏற்கனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு அரிசி அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் அரிசி விலை மிகவும்குறைந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.12 என்று விற்கப்பட்டுக் கொண்டிருந்த நல்ல ரக அரிசியின் விலை கூடதற்போது ரூ.9 ஆகக் குறைந்துள்ளது.
பாமக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் பிரிந்து போய்விட்டதால், அதிமுகவுக்கு ஒன்றும்பின்னடைவு ஏற்பட்டு விடவில்லை. மாறாக, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மக்களின் பேராதரவுடன்முன்னேற்றப் பாதையை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது.
சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக, தேவையான இடங்களில் வன்முறையில் ஈடுபடுவதாகக் கருதும் நபர்களைமட்டுமே கைது செய்கிறோம். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை.
என்னுடைய பெரியகுளம் தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக விரைவில் பெரியகுளத்தில்ஒரு அலுவலகம் திறக்கப்படவுள்ளது. கும்பக்கரையிலிருந்து கொடைக்கானலுக்கு புதிய சாலை அமைப்பதற்காகமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் பன்னீர்செல்வம்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications