சிவகங்கையில் அதிமுக தொண்டர் குத்திக் கொலை: திமுகவினர் மீது புகார்
சிவகங்கை:
சிவகங்கையில் அதிமுக-திமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக வேட்பாளரின் மைத்துனர்கொல்லப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியின் பஞ்சாயத்து தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
பஞ்சாயத்து தேர்தலில் தற்போதைய பஞ்சாயத்து தலைவரான ராமலிங்கம் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவைச்சேர்ந்தவர். இவரை எதிர்த்து போட்டியிடுபவர் திமுகவைச் சேர்ந்த பிரபாகர்.
ராமலிங்கத்துக்கு ஆதரவாக அவரது மைத்துனர். வெள்ளைச்சாமி என்கிற சுப்பாயி (வயது 40). என்பவரும் அவரதுதம்பி கணேசன் ஆகியோரும் தீவிர பிரச்சார்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருப்பாச்சேத்தியில் சிவன் கோவில் பகுதியில் போஸ்டர் ஒட்டுவதில் அதிமுக-திமுகவினருக்குஇடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் முற்றியது. திமுகவினர் வெள்ளைச்சாமியின் வயிற்றில் கத்தியால்குத்தினர்.
காயமடைந்து ரத்தம் கொட்ட மயங்கி விழுந்தார் வெள்ளைச்சாமி. அவர் உடனடியாக சிக்சைக்காக மதுரை அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெள்ளைச்சாமிஇறந்து போனார்.
இந்த கொலை தொடர்பாக வெள்ளைச்சாமியின் தம்பி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துளனனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. மேலும்அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமலிருக்க அதிக அளவில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications