அயோத்தியில் பாதுகாப்பு இல்லை: வாஜ்பாய் ஒப்புதல்
சென்னை:
அயோத்தி ராமஜென்ம பூமியில் தடைசெய்யப்பட்ட பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்நுழைந்ததற்குக்கு பாதுகாப்பு முழுமையாக இல்லாததே காரணம் என்று பிரதமர் வாஜ்பாய்கூறினார்.
ஆனால் நேற்று (புதன்கிழமை) விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் தலைமையில் ஒருகும்பல் அந்தத் தடுப்புச் சுவரைத் தாண்டி உள்ளே சென்றது. இதையடுத்து அயோத்தி முழுவதும் பரபரப்புஏற்பட்டது.
இந்நிலையில் இன்று பிரதமர் வாஜ்பாய் அகில இந்திய பாரதிய ஜனதாகக் கட்சித் தலைவர்ஜனா.கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார். அவருடன் மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி உள்ளிட்ட அமைச்சர்கள் வந்திருந்தனர்.
திருமணவிழாவில் கலந்துகொண்டுவிட்டு வாஜ்பாய் புறப்படும்போது நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது,
அயோத்தியில் பாதுகாப்புப் பற்றாக்குறை இருந்ததால் தான் தடைசெய்யப்பட்ட பகதிக்குள் அவர்கள் உள்ளேநுழைந்துவிட்டனர். தற்போது அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். அங்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்புஉள்ளது. ஆனால், போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். இதனால் தான் இப்படிப்பட்ட சம்பவம்நடந்துள்ளது என்றார் வாஜ்பாய்.
இதுகுறித்து வி.எச்.பியின் தலைவர் அசோக் சிங்கால் கூறுகையில், நாங்கள் வரும் உத்தரப் பிரதேச மாநிலசட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக நுழையவில்லை. எங்களுக்குகோவில் நடவடிக்கைகள் ஒழுங்காக நடக்கவேண்டும் என்பதுதான் நோக்கம் என்றார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.கவின் ஆதரவுடன் தான் வி.எச்.பி. இந்த செயலில்ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அயோத்தியில் வன்முறையை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடபா.ஜ.க-வி.எச்.பி. முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அயோத்திக்குள் அசோக் சிங்கால் நுழைந்தபோது அதே பகுதியில் சற்று தொலைவில் உத்திரப் பிரதேச முதல்வர்ராஜ்நாத் சிங் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தலித் பிரிவின் பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
உள்ளே நுழைந்த அசோக் சிங்காலைக் கைது செய்திருந்தாலோ அல்லது வேறு ஏதாவது போலீஸ் நடவடிக்கைஎடுத்திருந்தாலோ, ஊர்வலத்தினர் அனைவரும் உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பு இருந்ததாக சி.ஆர்.பி.எப்.படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் தான் அவரைத் தடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதுகுறித்து பைசாபாத் போலீஸ் டி.ஐ.ஜி. ஆர்.பி.சிங் கூறுகையில்,
நாங்கள் சென்று பார்த்தபோது, தடைசெய்யப்பட்ட பகுதியில் அசோக் சிங்கால் உட்பட ஒரு 15 பேர்அமர்ந்திருந்தனர். நாங்கள் அவர்களிடம் சென்று இது தடைசெய்யப்பட்ட பகுதி. இங்கு ஆட்கள் யாரும் நுழையக்கூடாது. எனவே இன்னும் 5 நிமிடத்தில் வெளியேறிவிடுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் உங்களைக் கைதுசெய்துவிடுகோம் என்று எச்சரிக்கை விடுத்தோம்.
உடனே அவர்கள் வெளியேறிவிட்டனர். அதனால் நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.மேலும் அவர்கள் மீது எந்த வழக்கும் நாங்கள் பதிவுசெய்யவில்லை. தற்போது அந்தப்பகுதி மத்திய ரிசர்வ்போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்) கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications