வன்முறை: அரசிடம் அறிக்கை கேட்கிறார் ஆளுனர்
சென்னை:
உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவின் போது நடந்த வன்முறை குறித்து விரிவான அறிக்கைஅளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு செவ்வாய்கிழமை நடந்தது. இந்த தேர்தலின் போதுசென்னையிலும், மேலும் சில இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கள்ள ஓட்டும் போடப்பட்டது.
தேர்தல் போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் தமிழக ஆளுனராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும்ரங்கராஜனுக்கு செவ்வாய்க்கிழமையன்றே கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திராவிலிருந்த அவர் தமிழக தலைமைச் செயலாளர் சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னைபுதன்கிழமை சென்னை ஆளுனர் மாளிகையில் சந்திக்குமாறு அவருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி நேற்று (புதன்கிழமை) ரங்கராஜனை சந்தித்தார் சங்கர். சென்னை மாநகராட்சி தேர்தலின் போதுவன்முறை நடக்கவுள்ளதாக முன்னரே பல தகவல்கள் வெளிவந்தன.
இது குறித்து திமுக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.அந்த கடிதம் தமிழகஅரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு இருந்தும் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தவில்லை. முன்னெச்செரிக்கை நடவடிக்கைள் ஏன் எடுக்கவில்லை என்று சங்கரை கேள்வி கேட்டுதுளைத்தெடுத்தார் ஆளுனர்.
தேர்தல் போது நடந்த வன்முறை குறித்து விரிவான அறிக்கையை தன்னிடம் வியாழக்கிழமை சமர்பிக்க வேண்டும்என்றும் ஆளுனர் உத்தரவிட்டார்.
ஆளுனரின் இந்த உத்தரவையடுத்து தேர்தல் போது நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணியில்புதன்கிழமையன்று அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications