வாக்குச்சீட்டுக்களை ஏரியில் போட்ட கிராம அதிகாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுராந்தகம் அருகே வேட்பாளராக போட்டியிட்ட மனைவிக்கு ஆதரவாக கள்ள ஓட்டுப் போட முயன்றார் கிராமநிர்வாக அதிகாரி. ஆனால் கிராமத்து மக்கள் தடுத்ததால் ஆத்திரமடைந்து வாக்கு சீட்டுகளை எடுத்து ஏரியில்போட்டு விட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

மதுராந்தகம் அருகே வெளியம்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. இதில்வெளியம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி சுப்ரமணியனின் மனைவி சாந்தி போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாகவாக்குப் பதிவு நடந்த செவ்வாய்க்கிழமையன்று சுப்ரமணியன் தனது ஆதரவாளர்களோடு அங்கு வந்தார்.

அவர்கள் சுப்ரமணியன் தலைமையில் வாக்கு சாவடிக்குள் புகுந்து சாந்திக்கு ஆதரவாக கள்ள ஓட்டுப் போடமுயன்றனர். இதையடுத்து வாக்களிக்க வந்திருந்த கிராமத்து மக்கள் வெகுண்டு எழுந்து அவர்களைத் தடுத்தனர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த சுப்ரமணியன் சாவடிக்குள் இருந்து ஐந்து கட்டு வாக்குச் சீட்டுக்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பின்னர் அவற்றை அங்கிருந்த ஏரியில் போட்டு விட்டு நடையைக் கட்டினார்.இதனால் வெளியம்பாக்கத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக விரைந்து வந்து சுப்ரமணியன் உள்பட 7 பேரை கைதுசெய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+