தேர்தல் வன்முறை... ஆளுனர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: இளங்கோவன்
சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து ஆளுனர் நடவடிக்கை எடுக்காததுஏமாற்றமளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கடந்த 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 16ம் தேதிநடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை வெடித்தது.கள்ள ஓட்டுகளும் போடப்பட்டன.
18ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலிலும் வன்முறை சம்பவங்களும், கள்ள ஓட்டு போடுவதும்தொடர்ந்தது .
இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலைவிட இரண்டாவது கட்ட தேர்தலில் வன்முறை சம்பவங்கள்அதிகம் நடந்துள்ளன. கள்ள ஓட்டும் அதிகமாக போடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுனர் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் வன்முறைக்கும், கள்ள ஓட்டுபோடுவதற்கும் காரணமாக இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுகேட்டுக் கொண்டபோது அதை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது.
ஆனால் தற்போது நடந்துள்ள தேர்தல் வன்முறை சம்பவங்களுக்கு பின் காங்கிரஸ் கட்சி தன் நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. தேர்தல் நடந்த இடங்களில் தேவையான அளவு போலீஸ் காவல் போடப்படவில்லை.
தற்போது தேர்தலில் நடந்த வன்முறை ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டது.
ஜார்ஜ் பெர்னாண்டசை மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருப்பதை எதிர்த்து இன்னும் இருதினங்களில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று கூறினார் இளங்கோவன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications