இந்திய தபால்துறை உஷார்
டெல்லி:
தபால்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் பரப்பப்பட்டு வருவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் முழுபரிசோதனைக்கு உட்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2 வாரகாலமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளுக்குஅனுப்பி வருகின்றனர்.
இந்தப் பார்சலில் பஞ்சு போன்ற ஒரு பொருளுக்குள் அந்த கிருமி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதுபோன்ற தபால்கள் இந்தியாவுக்கும் வர ஆரம்பித்துவிட்டன.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதனை செய்த பிறகேநாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன என்று தபால்துறைச் செயலாளர் குப்தா கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளைப் பரப்பக் கூடும் என்பதால், வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும்தபால்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதனை செய்யப்படுகின்றன.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள சர்வதேச தபால்துறை விதிமுறைகள் அனைத்தையும் சரியாகப்பின்பற்றவேண்டும் என்று, தபால்களைப் பிரிக்கும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
அனைத்து சர்வதேச விமானநிலையங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் பரிசோதனைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தபால்களைப் பிரிக்கும் அதிகாரிகள் அனைவரும், முன்னெச்சரிக்கையாக கைகளில் கிளவுஸ் மற்றும் முகத்தில்மாஸ்க் அணிந்துகொண்டு பணியில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆந்த்ராக்ஸ் கிருமிகள் அடங்கிய பார்சல்களைக் கண்டறியும் கருவிகள் எதுவும் தற்போதைக்கு தபால்துறையிடம்இல்லை. ஆனால் தேவைப்படும்போது அதுசம்பந்தமான நிறுவனங்களிடம் உதவி கோர முடிவெடுத்துள்ளோம்.
மேலும் அமெரிக்காவிலிருந்து வரும் தபால்களும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்தபால்களும் நிறுத்தப்படவில்லை.
இவ்வாறு குப்தா கூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications