ஆந்த்ராக்ஸ் ஆராய்ச்சி: இந்தியா தீவிரம்
டெல்லி:
ஆந்த்ராக்ஸ் கிருமி பற்றி தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையம் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக அம்மையத்தின் இயக்குனர் டாக்டர் கே.கே.தத்தா கூறினார்.
இந்தியாவில் ஆந்த்ராக்ஸ் அடங்கிய தபால்கள் என்று சந்தேகிக்கப்படும் பல கடிதங்கள் தேசிய தொற்றுநோய்ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வர ஆரம்பித்துள்ளன.
ஆந்த்ராக்ஸ் இருக்கலாம் எனக் கருதப்படும் தபால்களை பொது மக்கள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கஆரம்பித்துள்ளனர். இந்தக் கடிதங்களை போலீசார் அரசு மருத்துவமனைகளில் ஒப்படைக்கினறனர்.
டெல்லியில் இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 2 கடிதங்களை மருத்துவமனைகள் தேசிய தொற்று நோய் ஆராய்ச்சிமையத்துக்கு அனுப்பி வைத்துள்ளன. அந்தப் பார்சலில் ஆந்த்ராக்ஸ் கிருமி உள்ளதா என்று அந் நிறுவனம்ஆராய்ச்சி செய்து வருவதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.கே.தத்தா கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
2 நாட்களுக்கு முன்பு எங்கள் நிறுவனத்திற்கு அப்பலோ மருத்துவமனையில் இருந்து ஒரு பார்சல் அனுப்பப்பட்டது.அதில் இருந்த பவுடர் போன்ற பொருளின் தன்மைபற்றி ஆராய்ச்சி செய்ய அவர்கள் வேண்டுகோள்விடுத்திருந்தனர்.
ஆனால் அதில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருப்பதற்கான அறிகுறி எதுவும் ஆராய்ச்சியில் தெரியவில்லை. இருப்பினும்அதுபற்றிய ஆராச்சியை தொடர்ந்து நாங்கள் நடத்திவருகிறோம். இதேபோல ஒரு காவல் நிலையத்திலிருந்தும் ஒருகவர் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தீவிராவாதிகளால் ஆந்த்ராக்ஸ் கிருமி பரப்பப்படும் அபாயம் இருப்பது பற்றியும், அந்தக்கிருமியின் தன்மை பற்றியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த மத்திய சுகாதாரத் துறைஅமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில்பணியாற்றும் நிபுணர்களை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ராணுவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் கவனித்து வருகின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications