3 நாட்களில் 60 ஆப்கானிய மக்கள் பலி
காபூல்:
ஆப்கானின் காபூல் நகரத்தின் மீது அமெரிக்கா நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 3 நாட்களில் ஹெராத் நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள்கொல்லப்பட்டுள்ளனர்.
காபூல் நகரத்தின் மீது அமெரிக்கா இன்று அதிகாலை விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தியுள்ளது. இந்தத்தாக்குதலில் காபூலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர்படுகாயமடைந்துள்ளனர். 17க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டன.
இதேபோல ஹெராத் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த 3 நாட்களில் 50க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும் ஹெராத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஈசாக்சலைமான் என்ற கிராமத்தில் சனிக்கிழமை இரவுநடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காபூலில் இன்று அதிகாலை குண்டு வீச்சு
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் காபூலில் இன்று அதிகாலை 3க்கும் மேற்பட்ட இடங்களில் விமானம் மூலம்அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியது.
காபூலில் அமெரிக்க விமானங்கள் இன்று அதிகாலை குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியன. பாபூல் நகரத்தின்வடக்குப் பகுதியில் இந்த குண்டுவெடிப்புச் சத்தம் பலமாகக் கேட்டதாக பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
குண்டுவீசுவதற்கதாகத் தாழ்வாகப் பறந்த விமானத்தின் மீது தலிபான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்20 நிமிட இடைவெளியில் 2 அல்லது 3 முறை கேட்டது என்றும் அவர்கள் கூறினார்கள்.
மேலும் அந்த விமானம் ஹெலிகாப்டர் போன்ற அமைப்பில் இருந்தததாகவும், அதற்கு முன்பாக ஒரு ஜெட்விமானமும் பறந்து சென்றதாகவும் அவர்கள் கூறினார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications