செயலிழந்தது தமிழக அரசு: மத்திய அரசிடம் திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு முற்றிலுமாக செயலிழந்துவிட்டது என்றும் மத்திய அரசு உடனடியாகஇவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பியுள்ள ஒரு புகார் மனுவில் அன்பழகன் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அம்மனுவில்கூறியிருப்பதாவது:

கடந்த வாரம் நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தேர்தலின்போது மட்டுமல்லாமல், வாக்கு எண்ணிக்கை நடந்த இடங்களிலும் அவர்கள்வன்முறையில் இறங்கினர்.

சென்னையில் கராத்தே தியாகராஜன் தலைமையிலான அதிமுகவினர், 2 வாக்கு எண்ணும் மையங்களில்நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த திமுக மற்றும் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டனர்.

பின்னர் அங்கிருந்த வாக்குச் சீட்டுகளை எல்லாம் எடுத்து, திமுக வேட்பாளர்களுக்குக் குத்தப்பட்டிருந்த வாக்குச்சீட்டுக்களில் இங்க்கை ஊற்றி, அதை செல்லாத வாக்குகளாக்கிவிட்டனர்.

மேலும், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் முடிவுகளை வெளிடக் கூடாது என்று தேர்தல்அதிகாரிகளையும் அதிமுகவினர் மிரட்டி, தடுத்து விட்டனர்.

இவை போதாதென்று செல்லாத வாக்குச் சீட்டுகளையும் அதிமுகவுக்குப் போடப்பட்டிருந்த வாக்குச் சீட்டுகளோடுசேர்க்கும் படியும் அவர்கள் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.

இச்சம்பவங்களுக்கு போலீசாரும் துணை போயுள்ளனர். நடந்த வன்முறைகளையும் அவர்கள் கண்டு கொள்ளாமல்இருந்தனர். இதனால் தமிழக அரசு தற்போது முழுவதுமாகச் செயலிழந்து விட்டது.

மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் கூறியிருந்தார்அன்பழகன்.

இப்புகார் மனுவின் பிரதிகள் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானிக்கும் தமிழக ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜனுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+