வேளாங்கண்ணி விழாவுக்கு வருகிறார் வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணி சர்ச்சில் நடைபெறவுள்ள உலக உடல் நன்னலம் நாடுவோர் விழாவில் பிரதமர் வாஜ்பாய் கலந்துகொள்ளவிருப்தாக தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் கூறியுள்ளார்.

வேளாங்கண்ணி சர்ச்சில் அமைந்துள்ள தியான இல்லத்தில் உலக உடல் நன்னலம் நாடுவோர் தின விழா குறித்தஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தையும், அதிபருமான அருள்இருதயம் தலைமை வகித்தார்,.

ரோம் நகரிலுள்ள வாடிகன் மேய்ப்பு பணி நலவாழ்வு பேராலயத்தின் தலைவர் ஜாலியார் லொசானோ, செயலாளர்வின்சென்ட் அரக்கால், வேளாங்கண்ணி பேராலய குருமார்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில்பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நிருபர்களுக்குபேட்டியளித்த போது கூறுகையில்,

10வது உலக உடல் நன்னலம் நாடுவோர் விழா வேளாங்கண்ணி பேராலயத்தில் அடுத்த ஆண்டு (2002) பிப்ரவரிமாதம் 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை 3 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது.

9வது உலக உடல் நன்னலம் நாடுவோர் தின விழா சென்ற வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 10வதுஉலக உடல் நன்னலம் நாடுவோர் தின விழாவை கொண்டாடும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளதுபெருமைக்குரியது.

இந்த விழாவில் பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர் சி.பி. தாகூர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். உலகம்முழுவதிலுமிருந்து 1,500 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியா தவிர பல நாடுகளிலிருந்தும் ஆயர்கள், உடற் சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ பணியாளர்கள். தொண்டுநிறுவனத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விழாவின் போது இந்திய மருத்துவ மூலிகைகள் கண்காட்சி, கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+