ஆளுங்கட்சிக்கு கருணாநதி அறிவுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சம வாய்ப்பை மக்கள் அளித்துள்ளனர். இதைப்புரிந்து கொண்டு ஆளுங்கட்சியினர் நடந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து அமைப்புகளிலும் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் சமமான வெற்றியைவாக்காளர்கள் அளித்துள்ளனர். இதன் மூலம் தங்களை நிர்வகிப்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் உரிமை உள்ளது என்றுஅவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்களின் இந்த சம வாய்ப்பை சரியாகப் புரிந்து கொண்டு ஆளுங்கட்சியினர் செயல்பட வேண்டும்.ஜனநாயகத்தின் வெளிச்சம் அனைத்து சமூகத்தினருக்கும் சென்று சேரும் வகையில் ஆளுங்கட்சியின்செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநதி.












Click it and Unblock the Notifications