சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜனா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்டாலினுக்கு தலைவலி ஆரம்பாகிவிட்டது.

சென்னை மாநகராட்சித் துணை மேயராக அதிமுகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்படுவார்என்று கூறப்படுகிறது. இவர் அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட வட சென்னை மாவட்டச் செயலாளர்பாலகங்காவின் வெற்றிக்காக தீவிரமாகப் பாடுபட்டார் தியாகராஜன்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடந்த அன்று கராத்தே தியாகராஜன் சென்ற இடமெல்லாம் கலவரம்ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை மேயர் தேர்தலில் திமுக வெற்றிபெற்றாலும், கவுன்சிலில் அதற்கு மெஜாரிட்டி இல்லை. அதிமுககூட்டணிக்கு 82 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால் திமுக கூட்டணிக்கு 65 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரே துணை மேயராக வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதில்கராத்தே தியாகராஜனுக்குத் தான் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதிரடியாகச் செயல்படும் அவரை துணை மேயராக்கினால், மாநகராட்சிக் கூட்டத்தில் திமுகவுக்கு பெரும் சவாலாகஇருப்பார். மேலும் மாநகராட்சி ஆணையாளர் ஆச்சார்யலுவும் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதால், ஸ்டாலினைஸ்தம்பிக்க வைக்க கராத்தே தியாகராஜன் தான் சரியான ஆள் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.

மேலும் ஸ்டாலினைக் குறிவைத்தே ஜெயலலிதா திட்டமிட்டுக் கொண்டிருப்பதால், இந்த மாநகராட்சி பெரும் யுத்தகளமாக இருக்கும் என்று திமுகவினர் கருதுகிறார்கள்.

ஐயோ! கராத்தே தியாகராஜனா என்று திமுகவினர் இப்போதே கலங்கிப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஸ்டாலின் எந்தச் சவாலையும் சமாளிப்பார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+