பாகிஸ்தானில் அமெரிக்க வீரர்களை தாக்க மதவாதிகள் முயற்சி
ஜகோபாபாத் (பாகிஸ்தான்):
அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் ஜகோபாபாத் விமானத் தளத்தை இரண்டாவது முறையாகமுற்றுகையிட இஸ்லாமிய மதவாதக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு 3,000 ராணுவத்தினரைபாகிஸ்தான் குவித்துள்ளது.
இந்த விமானத் தளத்துக்குள் நுழைந்த அமெரிக்க வீரர்களைத் தாக்கவும், அமெரிக்க விமானங்களைசேதப்படுத்தவும் மதவாதக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே கடந்த வாரம் இதே முயற்சியில் இக் கட்சிகள்ஈடுபட்டன. இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
இந் நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் இந்த விமான நிலையத்தை முற்றுகையிட பல தலிபான் ஆதரவுபாகிஸ்ானிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தப் முற்றுகைப் பேரணிக்கு ஜமாத்-இ-இஸ்லாமி தலைமைதாங்குகிறது. இக் கட்சிகளின் தொண்டர்கள் நேற்று முதலே ஆயிரக்கணக்கில் இந்த நகரில் குவியஆரம்பித்துவிட்டனர்.
நிலைமை கட்டுமீறிப் போவதால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் அரசு 3,000 ராணுவத்தினரை அந்த நகருக்குஅனுப்பியுள்ளது.
இந்தப் பேரணிக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி போராட்டம் நடக்கும் எனஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் காஜி ஹூசைன் அகமத் லாகூரில் தெரிவித்தார். இதையடுத்து அவர்ஜகோபாபாத் செல்ல பாகிஸ்தான் அரசு தடை விதித்ததோடு அவைரக் கைது செய்யவும் போலீசாருக்குஉத்தரவிட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிந்து மாகாண உள்துறைச் செயலாளர் பிரிகேடியர் முக்தத்ர ஷேக் கூறுகையில்,
போராட்டம் நடத்துபவர்களை மிகக் கடுமையாக நடத்துவோம். வன்முறையைத் தூண்டினால் ராணுவம் அதைபார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றார்.
ஆனால், எங்கள் மண்ணைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் சகோதரர்களைக் கொல்ல அனுமதிக்க மாட்டோம்.விமானத் தளத்தை நிச்சயம் தாக்குவோம் என ஜமாத்-இ-இஸ்லாமி மூத்த தலைவர்களில் ஒருவரான முனவர்ஹூசைன் கூறினார்.












Click it and Unblock the Notifications