வங்க தேசத்திலிருந்து தப்பி வந்த 4 இந்து குடும்பங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வங்க தேசத்தில் சிறுபான்மையினர் மேல் மதவாதிகளின் தாக்குதல் தீவிரமாகியுள்ளதையடுத்து 4 இந்துக்குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். மேலும் 45 குடும்பங்கள்வெளியேறுவதற்குத் தயாராக உள்ளனர்.

வங்க தேசத்தில் ஏற்கனவே சிறுபான்மையினர் மேல் முஸ்லீம் மதவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டுதான்இருக்கிறார்கள்.

ஏற்கனவே மதவாதிகளுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான இந்துக்கள் வங்க தேசத்தை விட்டு வெளியேறிஇந்தியாவுக்கு வந்துள்ளனர்.

கடந்த 1ம் தேதி நடந்த தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார் கலீதா ஜியா. இவர் ஆட்சிக்குவந்தவுடனேயே அவருடைய "பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி"யைச் சேர்ந்த மதவாதிகள், இந்துக்கள் மீதுதாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களுடன் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற முஸ்லீம் மதவாதக் கட்சிகளும் சேர்ந்து கொண்டுதான் ஷேக்ஹசீனாவின் அவாமி லீக் ஆட்சியையே ஆட்டம் காணச் செய்துவிட்டன.

முஸ்லீம் மதவாதிகளால் இந்துக்களுக்கு மட்டுமல்ல, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்களும்அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். மதவாதிகளின் தாக்குதலுக்கு அவாமி லீக்கைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின்போதே, கலீதா ஜியா ஆதரவாளர்களின் கொடூரத் தாக்குதல் ஆரம்பித்து விட்டது.இந்துக்களின் மீது பல இடங்களில் வன்முறையை இவர்கள் தூண்டி விட்டனர்.

கலீதா ஜியா தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளதன் மூலம், இவருக்கு ஆதரவான முஸ்லீம் மதவாதிகள்அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு மூர்க்கத் தனமாக ஆட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் வங்க தேசத்தில் உள்ள இந்துக்கள் பாதுகாப்பு தேடி இந்தியாவுக்கு வர ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் 4 இந்துக் குடும்பங்கள் வங்க தேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

மேலும் 45 குடும்பங்கள் வங்க தேசத்தை விட்டு வெளியேறுவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்துக் குடும்பங்களில் உள்ள டீன்-ஏஜ் பெண்களை முஸ்லீம் மதவாதிகள் கும்பல் கும்பலாக வந்து கற்பழிப்பதுதான்வேதனையிலும் வேதனையான தகவல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+