ஒன்னா இருக்கக் கத்துக்கனும்: உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கிடையில் உள்ளஅரசியல் வேறுபாடுகளை மறந்து மக்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்க ஒன்றாகபாடுபடவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் 2 கூட்டணிக்கும் பிரித்து அதிகாரத்தை வழங்கியுள்ளனர். ஒருகட்சியைச் சேர்ந்தவரை நகரின் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ள அவர்கள், அந்த நகரத்தின்உறுப்பினர்களாக வேறு ஒரு கட்சியினரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதனால் அவையில் இருபிரிவினரும் அரசியல் வேறுபாட்டு மனப்பான்மையை பின்பற்றிவிடக் கூடாது. மக்கள்நலப்பணியில் தான் அக்கரை செலுத்த வேண்டும்.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கும், தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
அப்போது 8 நககராட்சிகளில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. ஆனால் தற்போது அதிமுகவும், திமுகவும் சமஅளவிலான இடங்களைப் பெற்றுள்ளன.
இது ஜனநாயகத்திற்கு ஏற்ற ஒரு நல்ல முடிவாகும். உறுப்பினர்களும், தலைவர்களும் இதை உணர்ந்து மக்களின்அடிப்படைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications