தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: காஷ்மீரில் படைகள் குவிப்பு
டெல்லி:
ஜம்மூ -காஷ்மீர் பகுதியில் உள்ள அவந்திபூர் விமான தளத்தின் மீது தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியதையடுத்து மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் அதிக அளவில் பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 22ம் தேதி லக்ஷார் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் தற்கொலை படைபிரிவைச் சேர்ந்த 4 பேர் பாகிஸ்தான் எல்லையருகே அவந்திபூரில் உள்ள இந்தியவிமானப் படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால் அவர்கள் முயற்சிமுறியடிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மத்திய தொழில்துறைபாதுகாப்பு படையினரும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. அவந்திபூர்விமான தளத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் பகுதி வழியாக செல்லும்விமானங்களில் மட்டும் ஏர்மார்ஷல்கள் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்என்றனர்.
எல்லையில் ராணுவம் குவிப்பா?
இந் நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா படைகளை குவித்துவருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் எல்லை பகுதியில் ராணுவம் குவிக்கப்படுவதாகவும், ராணுவ தளவாடங்கள்குவிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் கூறியதை இந்தியா மறுத்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் டைரக்டர் ஜெனரல் ஆப் மிலிட்டரி ஆபரேஷன் நேற்றுஇந்திய டைரக்டர் ஜெனரலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எல்லை பகுதியில்இந்தியபடைகள் குவிக்கப்பட்டது குறித்து பேசியதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.
இது குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,
இரு நாட்டு டி.ஜி.எம்.ஓக்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வழக்கமானஒன்றுதான்.
பாகிஸ்தான் கூறியுள்ளது போல் படைகள் எதுவும் எல்லை கட்டுப்பாட்டு காட்டுக்கு அருகேகுவிக்கப்படவில்லை.
1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போதுகூட இந்தியா எல்லை கட்டுப்பாட்டுகோட்டை தாண்டவில்லை என்றார்.
இந் நிலையில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளர் இனாமுல் ஹக்பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் வி.கே. நம்பியாரை இஸ்லமாபாதில் சந்தித்து பேசினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications