தேர்தல் தோல்வி: விழுப்புரத்தில் திமுக தொண்டரின் ஜிம் மீது அதிமுகவினர் தாக்குதல்
விழுப்புரம்:
உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் கோபமுற்ற அதிமுகவினர், விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த "ஸ்டாலின்உடற்பயிற்சி நிலைய"த்தை அடித்து நொறுக்கிய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம், நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மின்னல்ராஜா. இவர் திமுகவை சேர்ந்தவர். இவரது மனைவி ஈஸ்வரி.இவர் விழுப்புரம் 28வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சாந்தி ஆறுமுகம் போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மின்னல் ராஜாவை போலீசார் தேர்தலுக்கு முன் கைதுசெய்தனர். இறுதியில் தேர்தலில் ஈஸ்வரி வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தோல்வியடைந்த காரணத்தாலும், முன் விரோதம் காரணமாகவும் அதிமுகவை சேர்ந்த ரவி அலெக்ஸ்,குமரன், கடப்பாரை என்கிற துரை, அறச்செல்வம், ஆறுமுகம் உள்ளளிட்ட 10 பேர் மின்-னல் ராஜா நடத்-தி வந்-த"மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி நிலைய"த்தினுள் கடந்த 21ம் தேதி புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்துநொறுக்கினர். கண்ணாடியாலான பெயர் போர்டையும் உடைத்தனர்.
இது குறித்து உடற்பயிற்சி நிலைய காவலர் மாயவன் போலீசில் புகார் கொடுத்தார்.அவர் கொடுத்த புகாரின்அடிப்படையில் விழுப்பும் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரவி அலெக்ஸ்.குமரன்உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications