சென்னை மாநகராட்சி: இனி பிரச்சனையில்லை என்கிறது அதிமுக
சென்னை:
சென்னை மாநகராட்சி இனி ஜனநாயக முறைப்படி செயல்படும் என்று அதிமுக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளின்மாநகராட்சி மன்றத் தலைவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் மீண்டும் மேயராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், கவுன்சிலர்களாக அதிமுக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தபெரும்பான்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்தப்பதவியேற்பு விழாவில் அதிமுக மற்றும தமாகாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
நிருபர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் கராத்தே தியாகராஜன் கூறியதாவது,
சென்னை மாநகராட்சி மன்றத்தில் அதிமுக மற்றும் தமாகா பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் இனிமேல்மாநகராட்சி மன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கும்தீர்மானங்களை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம் என்றார்.
தமாகா கவுன்சிலரான வெற்றிவேல் கூறுகையில், மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி மாமன்றத்தை நடத்தநாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார்.
கடந்த முறை இந்த இருவர் தலைமையில் தான் அதிமுகவும், தமாகாவும் ஸ்டாலினுக்கு பெரிய பெரிய சிக்கல்களைஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications