அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழை பெய்யும்
சென்னை:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.
வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந் நிலையில்,அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. கடலில் கொந்தளிப்பும்ஏற்பட்டுள்ளது.
கோவையில் பெய்த கன மழைக்கு உப்பிலிப்பாளையம், பாண்டிபுதூர், வீர கேரளம் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அங்குள்ளகுடிசைவாசிகள் அனைவரும் வீடிழந்துள்ளனர். வீர கேரளம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் நீரில் மூழ்கி விட்டதால் அங்குகுடியிருப்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் கன மழை காரணமாக நிலச்சரிவு, மண் சரிவு போன்றவை ஏற்படாமல் முன்னெச்சக்கை நடவடிக்கைகளைகாவல்துறையினரும், அதிகாரிகளும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications