பன்னீர் செல்வத்தைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
சென்னை:
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
அதேபோல மதுரை நகர மேயர் செ.ராமச்சந்திரனும் சந்தித்துப் பேசினர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைவர்கள் அதிமுக தலைவர்களைச் சந்திப்பதோ, அல்லது அதிமுக தலைவர்கள் திமுகதலைவர்களையோ சந்திப்பதில்லை. குறிப்பாக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவோ, கருணாநிதியோ ஒருவரையொருவர்சந்தித்ததில்லை.
இந் நிலையில் புதிய அரசியல் அத்தியாயத்தை முதல்வர் பன்னீர் செல்வமும், மேயர் ஸ்டாலினும் துவக்கி வைத்துள்ளனர்.
மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், விரைவில் முதல்வர் பன்னீர் செல்வத்தைச் சந்தித்து சென்னை மாநகர வளர்ச்சித் திட்டங்கள் குறித்துவிவாதிப்பேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி சனிக்கிழமை காலை அவர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்குச் சென்றார். அவருடன்மதுரை மாநகர மேயர் செ.ராமச்சந்திரனும் சென்றார்.
சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, சென்னை மாநகர வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதாஎன்று ஸ்டாலினிடம் பன்னீர் செல்வம் கேட்டார்.
அதற்கு ஸ்டாலின், தற்போது மரியாதை நிமித்தமாகவே சந்திக்க வந்துள்ளேன். அதிகாரிகளுடன் பேசி விரிவான கோரிக்கைகளுடன்மீண்டும் ஒருமுறை சந்திக்கிறேன் என்றார்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. திருப்திகரமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்று அரசு விடுமுறை நாள் என்பதால் வீட்டில் சந்திக்க வருகிறோம் என்று கூறினோம். தாராளமாக வீட்டுக்குவரலாம் என்று முதல்வர் கூறினார். இதையடுத்துத் தான் வீட்டுக்குச் சென்றோம் என்றார்.
செ.ராமச்சந்திரன் கூறுகையில், மதுரை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் திமுக நிச்சயம் வெல்லும். அதிமுகவுக்கு ஆதரவு தரப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இருப்பினும் அதுகுறித்துக் கவலையில்லை. எங்களுக்குத்தான் மெஜாரிட்டிகவுன்சிலர்கள் ஆதரவாக உள்ளனர் என்றார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் ஸ்டாலின் சந்தித்து இருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால், அதே நேரத்தில் ஸ்டாலினை சந்திக்கபன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா அனுமதி கொடுத்ததே அரசியல் நாகரீகம் தான். அவரைச் சந்திக்க ஸ்டாலின் சென்றதும் மிகுந்தவரவேற்புக்குறியது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications