மதுரை அருகே ரூ.60 லட்சம் கஞ்சா பயிர்கள் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகள் எரிக்கப்பட்டன.
மதுரைக்கு அருகேயுள்ள தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில்கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேல்முருகனுக்கு சொந்தமான தோட்டங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.60 லட்சம்மதிப்புள்ள கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின் இந்த கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர்.
கஞ்சா பயிரிட்டது தொடர்பாக வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளர். வேல்முருகனின் 6 நண்பர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications