துணை மேயராகிறார் கராத்தே தியாகராஜன்
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போலவேகராத்தே தியாகராஜன் போட்டியிடவுள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் மு.க.ஸ்டாலின் 5000 வாக்குகள்வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார். மேயர் பதவி திமுக வசம் இருந்தாலும், அதிககவுன்சிலர்கள் திமுகவிடம் இல்லை. அதிமுக கூட்டணியிடம் 82 கவுன்சிலர்கள்உள்ளனர்.
இந்த நிலையில் துணை மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும்சூழ்நிலை ஏற்பட்டது. அதிமுக சார்பில் கராத்தே தியாகராஜனுக்கு அந்த வாய்ப்புகிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடியவர், அதிமுகவுக்கு சாதகமாக சபையைநடத்திச் செல்லக் கூடியவர், திமுவினரை அடக்கும் தகுதி படைத்தவர் என்று பலகாரணங்களால் கராத்தே தியாகராஜனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
மேலும், ஜெயலலிதாவைச் சந்தித்த கராத்தே தியாகராஜன், என்னிடம் துணை மேயர்பதவியைக் கொடுங்கள். ஸ்டாலினுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன் என்றுகூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது துணை மேயர் தேர்தலில் கராத்தே தியாகராஜன்போட்டியிடுவார் என்று அ-திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னை மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் உள்ள அமைச்சர்ஜெயக்குமார், வளர்மதி ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், கராத்தேதியாகராஜனின் வெற்றிக்குப் பாடுபடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்களின் கூட்டத்தை இரு அமைச்சர்களும் கூட்டிகராத்தே தியாகராஜனுக்கு வெற்றி வாய்ப்பத்ை தேடித் தரும்படி கேட்டுக் கொண்டனர்.
155-வது வார்டில் முதலில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாகஅறிவிக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் பின்னர் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications